‘தல 59’-ல் இணைந்த பிரபல குணச்சித்திர நடிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அஜித் நடித்து வரும் ‘தல 59’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் நடிக்கவுள்ளார்.

Actor Delhi Ganesh join the sets of Ajith's 'Thala 59'

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஹெஷ்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தல 59’ திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படம், ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், புதிதாக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் டெல்லி கணேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ‘தல 59’ ஷூட்டிங்கில் நடிகர் டெல்லி கணேஷ் பிசியாக நடித்து வருகிறார்.ஏற்கனவே அஜித் நடித்த ‘தொடரும்’, ‘ஜனா’ உள்ளிட்ட திரைப்படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே.1ம் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.