ஷேட்ஸ் ஆஃப் சாஹோ- பாகுபலி நாயகனின் அடுத்த வீடியோ பற்றிய அப்டேட்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சாஹோ’.

A second glimpse of Prabhas’s Saaho making video to be released on 3rd March 2019

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். வில்லனாக நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. பிரபாசின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியானது. ஆக்‌ஷன் காட்சிகள் உருவான விதமும், பிரபாஸின் பைக் சேசிங் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றிருந்தன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஷேட்ஸ் ஆஃப் சாஹோ என்ற பெயரில் இரண்டாவது மேக்கிங் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த வீடியோ வரும் மார்ச்.3ம் தேதி ரிலீசாகவுள்ளது.