'கடவுளின் தேசம் மீண்டும் உயிர்த்தெழும்'.. வீடியோ வழியாக நம்பிக்கை விதைக்கும் ரம்யா நம்பீசன்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 21, 2018 05:49 PM
Will hope Kerala Rise and Shines again: Ramya Nambessan

கனமழை,நிலச்சரிவு ஆகியவைகளால் ஒட்டுமொத்த கேரளாவும் தீரா சோகத்தில் ஆழ்ந்துள்ளது. எனினும் உலகெங்கிலும் இருந்து குவியும் நிதியும், தன்னலம் கருதாதவர்களின் உதவியும் 'கடவுளின் தேசத்தை' மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கடவுளின் தேசம் இந்த கடுஞ்சூழலில் இருந்து கண்டிப்பாக வெளிவரும்,மீண்டும் இங்கே பசுமை துளிர்க்கும் என நடிகை ரம்யா நம்பீசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு நம்பிக்கை விதைத்துள்ளார்.அந்த வீடியோவில் தனியாக சிறுமி பாறையின் மேல் நிற்பது போலவும், இயற்கை அன்னை மீண்டும் துளிர்த்து பசுமையை விதைப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

 

மனிதநேயத்தால் இந்த பெரும் சேதத்தில் இருந்து கடவுளின் தேசம் உயிர்த்தெழட்டும்...

 

 

Tags : #KERALA #KERALAFLOOD #RAMYANAMBESSAN