'கனவை விட கடவுளின் தேசமே முக்கியம்'..4 வருட சேமிப்பை நன்கொடையாக வழங்கிய சிறுமி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 20, 2018 07:48 PM
Kerala Floods: Villupuram girl Anupriya got a reward from hero cycles

விழுப்புரம் மாவட்டம் கே.கே.புரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி அனுப்பிரியா, தான் சைக்கிள் வாங்க வேண்டும் என 4 ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த 9 ஆயிரம் ரூபாய் பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்தார்.

 

இந்த தகவல் வெளியில் பரவ அனைவரும் அவரின் தயாள குணத்தை பாராட்டினர். மேலும் பலர் அவருக்கு சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொடுக்கவும் முன்வந்தனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அனுப்பிரியாவின் சேவையை பார்த்து வியந்து போன ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், அவருக்கு ஆண்டுக்கு ஒரு சைக்கிள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

 

இந்தநிலையில் சொன்னதுபோல சிறுமி அனுப்பிரியாவுக்கு ஹீரோ நிறுவனம் சைக்கிளை வழங்கியுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags : #KERALA #KERALAFLOOD #ANUPRIYA #VILLUPURAM