All
Looks like you've blocked notifications!

பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் மாதம் 7-ம் தேதி துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என 2 மாநிலங்களில் இருந்தும் சுமார் 8.66 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.

 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுத்தேர்வு இயக்குநர் வசுந்தரா தேவி பிளஸ் 2 ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''தேர்வுத்துறையின் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று(21.02.2018) பிளஸ் 2 ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

பள்ளி தலைமை ஆசிரியர்கள், வரும் பிப்ரவரி 26-ம் தேதிக்குள் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 26-ம் தேதிக்குப் பின், ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாது," என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 22, 2018 1:44 PM #PLUSTWOEXAM #TAMILNADU #HALLTICKET #பிளஸ்டூ #ஹால்டிக்கெட் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People