All
Looks like you've blocked notifications!

சிக்னல் பிரச்சினை 2 அல்லது 3 நாட்களில் முடிவுக்கு வரும் என, ஏர்செல் நிறுவன தென்னிந்திய தலைவர் சங்கர நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

 

எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90% டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டாயமாக, 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. இதனால் மொத்தமுள்ள 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை.

 

எங்களுக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

 

ஒரு வேளை சமரச பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தால், மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுடன் கைக்கோர்த்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்கு பெற்று தரும் முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 23, 2018 11:06 AM #AIRCEL #TAMILNADU #ஏர்செல் #தமிழ்நாடு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People