MIC Anthem Mobile BNS Banner
'1' நிமிட தாமதத்துக்காக பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்... வீடியோ இதோ!

 

பிரிட்டனில் மே தெரசா தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி, தற்போது நடைபெற்று வருகிறது. தெரசாவின் அமைச்சரவையில், சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராக மைக்கேல் பேட்ஸ் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

 

இந்தநிலையில், பெண்களுக்கான சம உரிமை வழங்குவது குறித்த விவாதம் நேற்று (31.1.2018) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. விவாதத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் பாரோலஸ் லிஸ்டர் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

 

ஆனால், இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய பேட்ஸ் அப்போது அவையில் இல்லை.

 

பின்னர் 1 நிமிடம் தாமதமாக அவைக்கு வந்த பேட்ஸ் " எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது என்னுடைய கடமை. சரியான நேரத்தில் பதிலளிக்க முடியாமல் போனதற்காக, நான் வெட்கப்படுகிறேன்.

 

அவைக்கு 1 நிமிடம் தாமதமாக வந்ததற்காக என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன்" என கூறிவிட்டு, உடனடியாக அவையை விட்டு வெளியேறினார்.

 

பேட்ஸின் இந்த செயலைக்கண்டு கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் பாரோலஸ் லிஸ்டர் உட்பட, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

பின்னர்  இதுகுறித்து பேசிய லிஸ்டர் " அவர் மன்னிப்பு கேட்டாலே போதுமானது. இதற்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை" என கருத்துத் தெரிவித்தார்.

 

இந்நிலையில், பேட்ஸின் ராஜினாமாவை பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

Read More News Stories