‘உலகமே ஐபிஎல் வந்தால் சந்தோஷப்படுது.. நாங்க பயப்படுறோம்’.. இஷாந்த் ஷர்மாவின் மனைவி!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 21, 2019 12:00 PM

வரவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் கேட்டு இன்ஸ்டாகிராமில் தொந்தரவு செய்த ரசிகரை இஷாந்த் ஷர்மாவின் மனைவி கலாய்த்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ishant sharma\'s wife troll Instagram follower, goes viral

ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 23 -ஆம் தேதியில் இருந்து நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மாவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

இந்நிலையில் இஷாந்த் ஷர்மாவின் மனைவியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதில், ரசிகர் ஒருவர் ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். அதற்கு இஷாந்தின் மனைவி, பேடிஎம்ல் கிடைக்கும் என கலாய்த்ததோடு, உலகமே ஐபிஎல் வரவை கண்டு சந்தோஷப்படும் போது, நாங்கள் ஐய்யோ ஐபிஎல் வந்துவிட்டதே என பயப்படுகிறோம் என இஷாந்த் ஷர்மாவின் மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது வைராகி வருகிறது.

Tags : #IPL2019 #ISHANTSHARMA #WIFE #INSTAGRAM #VIRAL