‘இதுதான் இந்தியாவின் முதல் கார்’.. இணையத்தைக் கலக்கும் வைரல் போட்டோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 20, 2019 02:53 PM

இந்தியாவின் முதல் மாருதி 800 காரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

India’s first Maruti 800, Photo goes viral

இந்தியாவில் வின்டேஜ் ரக கார்களின் மேல் கார் பிரியர்களுக்கு எப்போது தனி பிரியம் உண்டு. இந்தியாவில் இதுபோன்ற கார்களை கண்டறிந்து அதை மறு சீரமைப்பு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியாவின் முதல் மாருதி 800 கார் மீட்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஹர்பால் சிங் என்பவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லக்கி குலுக்கலில் வெள்ளை நிற முதல் மாருதி 800 காரை வென்றுள்ளார். இந்த காரின் சாவியை அப்போதைய இந்தியப் பிரதமரின் கைகளால் ஹர்பால் சிங் என்பவர் பெற்றுள்ளார்.

இதனை அடுத்து ஹர்பால் சிங் மறைவுக்கு பின்னர் இந்தியாவின் மாருதி 800 கார் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இந்த கார் குறித்து அறிந்த மாருதி சுசூகி சர்வீஸ் சென்டர், உடனே காரை மீட்டு பராமரித்து வருகின்றனர்.

தற்போது இந்தியாவின் இந்த முதல் மாருதி 800 காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #MARUTHI800 #CAR #PHOTO #VIRAL