'4வது 5வது, ஆர்டர்ல' இவங்க ரெண்டு பேரும் இறங்குனா...டீம் வேற லெவல்ல இருக்கும்...அதிரடி பேச்சு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 21, 2019 11:28 AM

ஒரு நாள் போட்டிகளில் உலககோப்பை மிகமுக்கியமான ஒன்று,சரியான திட்டமிடுதல் இருந்தால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என,முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

Dhoni hould play at the No 5 position and No 4 for Rayadu says Laxman

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ''கடந்த ஓராண்டாக இந்திய அணியின் செயல்பாட்டினை பார்க்கும் போது,மிகவும் சிறப்பாக உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின்போது,அவர்கள் சொந்த மண்ணிலேயே அவர்களை வீழ்த்தியது மிக பெரிய சவாலான விஷயம். அதனை மிக சரியாக செய்திருக்கிறார்கள் இந்திய வீரர்கள். அதோடு இந்திய அணியின் பந்து வீச்சும் மிக சிறப்பாக உள்ளது. எதிரணியை குறைவான ரன்களில் கட்டுப்படுத்தும் திறன் நமது வீரர்களிடம் உள்ளது.

மேலும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட தோனி தற்போது நல்ல திறனுடன் இருக்கிறார். தோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அவரால் நிச்சயம் ஆட்டத்தை சிறப்பாக முடிக்க முடியும். அவர் இந்திய அணிக்கு மிக பெரிய தூணாக இருப்பார் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அதே போல் சமீபகாலமாக அம்பத்தி ராயுடு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 90 ரன்கள் அவரது திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் 4-வது இடத்தில் விளையாடினால், நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுப்பார் என லஷ்மண் தெரிவித்துள்ளார்.

Tags : #MSDHONI #CRICKET #BCCI #VVS LAXMAN #WORLD CUP 2019 #AMBATI RAYADU