‘24 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கிரிக்கெட் அணி’.. 3 ஓவர்களில் போட்டியை முடித்து அசத்தல்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 19, 2019 06:31 PM

ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடத்த ஒருநாள் போட்டியில் ஓமன் அணி  24 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியுள்ளது.

Oman dismissed for just 24 runs against scotland

ஓமனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்காட்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி அல் அமராத் என்னுமிடத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஓமன் அணி வீரர்கள் ஸ்காட்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

17.1 ஓவர்களில் ஓமன் அணி 24 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஒரு வீரர் 15 ரன்கள் எடுத்திருந்தார். 4 வீரர்கள் 1 ரன்னிலும், 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர்.

இதனைத் தொடர்ந்து 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள் 3.2 ஓவர்களில் 26 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர்.

Tags : #FOLLOWSCOTLAND #OMAN #SCOVOMAN #ODI #CRICKET