'எங்கள கலாய்ச்சிட்டாராமா'...'சாம்பார் மஞ்சள் கலருல தான் இருக்கும்'...பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 20, 2019 02:14 PM

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில்,ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.முதல் 17 போட்டிகள் மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடக்கும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

CSK gives epic reply to RCB in twitter

இதனிடையே ரசிகர்களுக்கு டபுள் சந்தோசம் என்னவென்றால்,முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.இந்நிலையில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதல் போட்டி குறித்து,ராயல் சேலஞ்சர்ஸ் அணி தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருந்தது.

அந்த ட்விட்டில் சிஎஸ்கேவை குறிப்பிடும் விதமாக ''என்னதான் தென்னிந்தியாவில் கார உணவுகள் இருந்தாலும். இனிப்பான சாம்பார்தான் எங்கள் தேர்வு'' என நக்கலாக பதிவிட்டிருந்தது.அதற்கு சிஎஸ்கே "சாம்பார் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்" என அதிரடியாக பதிலடி அளித்திருந்தது.

சென்னையின் அணியின் இந்த பதிலடியினை ரசிகர்கள் பலரதும் ரீட்வீட் செய்து வருகிறார்கள்.சென்னை அணிக்கு 12 பேர் கொண்ட குழு வேலை செய்கிறதோ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்கள்.