குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை...தமிழகத்தில் விலை என்ன?

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 05, 2018 10:01 AM
Government cuts petrol, diesel prices by Rs 2.50

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருந்தது. இது அடித்தட்டு மக்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.

 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50-யை குறைத்து அறிவிப்பை வெளியிட்டார். இதில் ரூ. 1.50 வரியில் குறைக்கப்படும். மீதம் உள்ள ஒரு ரூபாய் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு வசூலிக்கும்.

 

இந்த விலை குறைப்பு மக்களுக்கு சற்று நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 87.33 ரூபாயும், டீசல் விலை 79.90 ரூபாயும் உள்ளது. இதனால் தற்போது பெட்ரோல் விலை 84.70 ரூபாய்க்கும், டீசல் விலை77.11 ரூபாய்க்கும் விற்க உள்ளது.