'நண்பேன்டா' புதுமணத் தம்பதியருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 17, 2018 11:00 AM
Friends give 5 liters petrol as gift to newly married couple

பெட்ரோல் டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.இந்த விலை உயர்வு அடித்தள மக்களை வெகுவாக பாதித்துள்ளது.இந்நிலையில் கடலூரில் நடந்த திருமண வரவேற்பில் புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசளித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரச்சி கிராமத்தில் இளஞ்செழியன், கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் என பலபேருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இளஞ்செழியனின் நண்பர்கள் அவருக்கு 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்தனர்.இது அங்கிருத்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் பெட்ரோல் விலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருக்கும் திருமண மண்டபத்தில் பெட்ரோலால் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #PETROLPRICEHIKE #PETROL PRICE HIKE