பெட்ரோல் விலை உயர்வு.. மாட்டு வண்டியில் ஆட்டோ ஏற்றி நூதன போராட்டம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 17, 2018 06:06 PM
Petrol price hike - Protests on bullock carts

பெட்ரோல் விலை பெருகி வருவதற்கு அங்கங்கே எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டமும் நடந்து வருகின்றன.  ஒரு திருமண தம்பதியர்க்கு கூட 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்து பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதை மறைமுகமாகக் கூற முயற்சித்த இளைஞர்களும் ட்ரெண்டாகினர்.

 

இந்நிலையில் தூத்துக்குடியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில்  ஆட்டோவை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு நூதன போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினரான தீபா பின்னாளில் சுயமாக எம்ஜிஆர் அமா தீபா எனும் பேரவையைத் தொடங்கினார்.

 

இவரது கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, தூத்துக்குடியில் ஆட்டோவை மாட்டு வண்டியில் ஏற்றி நடந்த  போராட்டத்திற்கு  மாவட்ட செயலாளர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

Tags : #PETROLPRICEHIKE #DEEPA #MGRAMMAPERAVAI #PETROLPRICE