ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கப்போகும் பிரபல இயக்குநர்: ஜெயானந்த் திவாகரன் தகவல்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 23, 2018 04:13 PM
Director Lingusamy is going to make biopic on Jayalalitha

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை லிங்குசாமி இயக்க இருப்பதாக,திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுக்க, தமிழ் சினிமாவின்  பல இயக்குநர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.இயக்குநர்கள் பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய மூவரும் தனித்தனியாக ஜெ.வின் வாழ்க்கையைப் படமாக எடுக்க இருக்கின்றனர்.

 

இந்த வரிசையில் பிரபல இயக்குனர் லிங்குசாமியும் இணைய இருக்கிறார்.இதுகுறித்த தகவலை ஜெயானந்த் திவாகரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் "அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்களால் படமாக்கப்படும். இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்" என குறிப்பிடுள்ளார்.

Tags : #JAYALALITHAA #JJAYALALITHAA #LINGUSAMY #BIOPIC