All
Looks like you've blocked notifications!

நீட் தேர்வு காரணமாக மறைந்த அரியலூர் அனிதாவின் வாழ்க்கை, 'Dr.S.அனிதா M.B.B.S' என்ற பெயரில் படமாக உருவாகவுள்ளது. இதில் அனிதா கதாபாத்திரத்தில் நடிக்க 'பிக்பாஸ்' புகழ் ஜூலி ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இதுகுறித்து ஜூலி நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், "அனிதா எம்.பி.பி.எஸ் படத்துக்காக படக்குழு என்கிட்டே கேட்டாங்க. எனக்கு நம்பிக்கை கெடையாது. ஆனா இந்தப் படத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன்னு அவங்க சொன்னாங்க. 

 

அதனால அனிதா போல மாறுவதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். இது நல்ல படமாக அமையுமான்னு தெரியாது. ஆனால் நிறைய பேருக்கு இப்படம் ஒரு நல்ல பாடமாக இருக்கும்னு நம்பறேன்," என்றார்.

 

மறைந்த அனிதாவின் பிறந்தநாளான இன்று, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAR 5, 2018 8:47 PM #JULIE #ANITHAMBBS #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People