அமலா பாலுடன் திருமணமா?.. நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 27, 2018 04:40 PM
Actor Vishnu Vishal denies Marriage rumors

நடிகை அமலா பாலை திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்திகளுக்கு, நடிகர் விஷ்ணு விஷால் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

 

விஷ்ணு விஷால்-அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' படம் ரசிகர்கள்-விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது. ராட்சசன் படத்தின் வெற்றியைக் கொண்டாடிய அதே வேளையில், தனது காதல் மனைவி ரஜினியைப் பிரிவதாக விஷ்ணு விஷால் அறிவித்தார்.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 'ராட்சசன்' படத்தில் நடித்த அமலா பாலை நடிகர் விஷ்ணு 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக, சமூக வலைதளங்களில்  தகவல்கள் வெளியாகி வந்தன.

 

இதற்கு நடிகர் விஷ்ணு தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' என்ன ஒரு முட்டாள் தனமான செய்தி. நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் குடும்பம் உள்ளது. பரபரப்புக்காக எதையும் எழுதாதீர்கள்,'' என காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

 

விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #VISHNUVISHAL #AMALAPAUL #RATSASAN