நானும்,எனது மனைவியும் சட்டப்படி பிரிந்து விட்டோம்: நடிகர் விஷ்ணு விஷால்

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 13, 2018 03:49 PM
Actor Vishnu Vishal officially got divorced

நானும் எனது மனைவியும் சட்டப்படி பிரிந்து விட்டோம் என, ராட்சசன் புகழ் நடிகர் விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

 

எனது அன்பான நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, கடந்த 1 வருடத்திற்கும் மேலாக நானும், எனது மனைவி ரஜினியும் பிரிந்து இருந்தோம். இப்போது சட்டப்பூர்வமாக இருவரும் பிரிந்து விட்டோம்.

 

எங்கள் இருவருக்கும் ஒரு அழகிய மகன் இருக்கிறார். அவரை வளர்ப்பதில் நாங்கள் இணைந்து செயல்படுவோம். நானும், ரஜினியும் இணைந்து வாழ்ந்த வருடங்கள் அற்புதமானவை.இனிவரும் காலங்களில் நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம். ஒருவர்மீது மற்றொருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம்.

 

எங்களின் இந்த தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

Tags : #RATSASAN #VISHNUVISHAL #DIVORCE