'மாநகரம்' இயக்குநரின் 'அடுத்த ஹீரோ' இவரா?.. விவரம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 28, 2018 06:57 PM
Actor Karthi\'s next film to be directed by Lokesh Kanagaraj

'மாநகரம்' புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில், கார்த்தி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசேந்திரா,சார்லி ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநகரம் ரசிகர்கள்,விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

 

இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த உண்மையினை அறிந்து கொள்ள நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தோம். கார்த்தி இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், தேவ் படத்துக்குப்பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

 

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை, படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #KARTHI #LOKESHKANAGARAJ