சாதிமீறிய காதல்.. 18 வயது மகளை கோடரியால் வெட்டிய தந்தை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 28, 2018 07:52 PM
A father who killed his 18 year old daughter with an axe

உத்திர பிரதேசத்தில், தான் பெற்ற மகள் மேல்சாதிக்காரரை காதலித்ததால், தந்தை ஒருவர் தன் மகளை கோடரியால் தாக்கியுள்ளார். உத்திர பிரதேசத்தின் பாப்ரலா கிராமத்தில் வசித்து வந்தவர் 18 வயது ஸ்வாதி கோஸ்வாமி. இவர் தன்னுடன் பயின்று வந்த ஒரு உயர்சாதி பிரிவு மாணவனை காதலித்து வந்துள்ளார். பிறகு சமூக வலைதளத்தில், தன் காதலனுடன் எடுத்த புகைப்படத்தை ஸ்வாதி பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ஸ்வாதியின் உறவினர் ஒருவர் ஸ்வாதியின் தந்தை ராஜ்குமார் கோஸ்வாமியிடம் தெரிவித்துள்ளார்.

 

இதனை அறிந்த ராஜ்குமார் கோஸ்வாமி ஆத்திரத்தில் தன் மகள் ஒரு உயர்சாதி பிரிவு மாணவரை காதலித்ததற்காகவோ அல்லது காதலித்த செய்தி கோபத்தை வரவழைத்துள்ளதாலோ, கோடரியை எடுத்து தன் வீட்டிலேயே வைத்து ஸ்வாதியை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் ஸ்வாதியின் குடும்ப நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பெருத்த காயத்துடன் பலமாக பாதிக்கப்பட்ட ஸ்வாதி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

காதல் செய்ததாலும், உயர்சாதி பிரிவு ஆணை காதல் செய்ததாலும் பெற்ற மகளையே, தந்தை கோடரியால் வெட்டியுள்ள இச்சம்பவம் பொது சமூகத்தினரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இப்படியான சமூகத்தில் வாழும் இளைஞர்கள் வாழ்க்கை பரிதாபத்துக்குரிய நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் இணையத்தில் பதிவிட்டபடி உள்ளனர்.

Tags : #HONOURKILLING #ATTEMPTMURDER #UTTERPRADESH