Rahul Gandhi: பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்
RAHUL GANDHI: பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்

நாம் அனைவருமே தேசியவாதிகள் தான். அவர்களின் திட்டத்தின் அடித்தளம் டோக்லாமில் போடப்பட்டுள்ளது. இது இந்திய தேசத்திற்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாகும். ஜம்மு & காஷ்மீர் மற்றும் நம் வெளியுறவுக் கொள்கையில் நாம் பெரிய தவறுகளை செய்துள்ளோம். சீனர்களும் பாகிஸ்தானியர்களும் திட்டமிடுகிறார்கள் என்பது நமக்கு மிகத் தெளிவாகவேத் தெரிகிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இருக்க கூடிய ஒரே மிகப்பெரிய மூலோபாய இலக்கு, பாகிஸ்தானையும் சீனாவையும் தனித்தனியாக வைத்திருப்பதுதான். ஆனால், நீங்கள் அவர்களை ஒருவொருக்கொருவர் நெருக்கமாக்கி விட்டீர்கள். நம் முன் நிற்கும் அந்த சக்தியை, குறைத்து மதிப்பிடாதீர்கள். இது இந்திய மக்களுக்கு எதிரான மிகப்பெரிய ஆபத்து. ஏனென்றால் சீனா தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது. நீங்கள் சீனாவையும் பாகிஸ்தானையும் ஒன்றாக இணைத்துவிட்டீர்கள்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் நடந்த குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸின் வயநாடு தொகுதி எம்.பி.யும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பேசியுள்ளார்.

அரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்