Quinton De Kock
QUINTON DE KOCK

மும்பை அணியின் தொடக்க வீரராக கடந்த சில சீசன்களில், களமிறங்கிய தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி காக் கூட, சென்னை அணியின் தொடக்க வீரருக்கு பொருத்தமாக தான் இருப்பார்.

ஆரம்பத்தில் இருந்தே, சிறந்த ஒரு ஸ்கோரை எட்டும் வகையில் ஆடும் டி காக், சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடர் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

அந்த வகையில், அதிக அனுபவம் மற்றும் அதிரடி பேட்டிங் என இரண்டும் கை கொடுக்கும் என்பதால், ஒரு வேளை டி காக்கிற்கு கூட சிஎஸ்கே அணி திட்டம் வகுக்கலாம். ஆனால், டி காக் விக்கெட் கீப்பர் என்பதால், அவர் அணியில் இடம்பெற்றால், தோனி அல்லது டி காக் ஆகிய இருவரில், யார் கீப்பராக செயல்படுவார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.