'பரியேறும் பெருமாள்' பூ ராம்
'பரியேறும் பெருமாள்' பூ ராம்

'பரியேறும் பெருமாள்' படத்தில் கதிர் கதாபாத்திரம் தொடக்கத்தில் இருந்து அநீதிகளையும் ஒடுக்கங்களையும் எதிர்த்து பேச நினைக்கும்போதெல்லாம், அமைதியாய் இருக்கும் பூ ராமின் பாத்திரத்தை கவனிக்க முடியும். ஆனால் ஒரு கட்டத்தில் கதிரிடம், 'அன்னைக்கு என்ன அடக்க நெனைச்சவன்லாம் இன்னைக்கு ஐயா சாமிங்குறான்..  நீயும் என்ன மாதிரி ஜெயிச்சுட்டு அப்றம் பேசு.. ஒரு பய சீண்டமுடியாது' என சொல்லி 'சாதிய அடக்குமுறைக்கு எதிரான ஆயுதம், உங்கிட்ட இருக்குற ஆயுதம் படிப்ப புடிச்சுக்க'  கல்வி ஒரு பலமான ஆயுதம் என்பதையும், அதன் அத்தியாவசியத்தையும் உணர்த்துவார்.