மாஸ்டர் ஜே.டி
மாஸ்டர் ஜே.டி

விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'.  கல்லூரியிலும் பின்னர் சிறுவர் சீர்திருந்த பள்ளியிலும் வழிமாறி செல்லும் மாணவர்களை திருத்துகிறார். கல்லூரியை பொறுத்தவரை ‘நண்பனாக’ மாணவர்களிடையே இருக்கிறார். பெண்களுக்கு தொல்லை கொடுக்கும்போது அதற்கான சூழல் அமையும்போது வெளியில் துணிச்சலாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். படிக்கும் மாணவர்களை வைத்து அரசியல் செய்யப்படும்போது, மாணவர்கள் அரசியல் பயில வேண்டும் என வலியுறுத்துகிறார். சிறார்களை வைத்து ராஜீய ரவுடிகள் உருவாவதை தடுக்க முனையும் ஜே.டி, அந்த ராஜீய ரவுடிகள் முந்தைய ஒழுங்கீனமான பாதையின் விளைவுதான் என சுட்டிக் காட்டுகிறார்.