vinayakar chathurthi: புஷ்பா அல்லு அர்ஜூன் லுக்கில் விநாயகர் சிலை
VINAYAKAR CHATHURTHI: புஷ்பா அல்லு அர்ஜூன் லுக்கில் விநாயகர் சிலை

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆந்திர காடுகளில் கடத்தல் மன்னனாக திகழும் புஷ்பராஜ் என்கிற புனைவு கதாபாத்திரத்தை சுற்றி சுழலும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே வரவேற்பைப் பெற்றன. இந்த படத்தின் 2-ஆம் பாகம் தற்போது உருவாகத் தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முகவாய்க்கு அடியில் கைகளை வைத்து ஒரு ஸ்டைலுடன் அல்லு அர்ஜூன் பேசும் வசனம் பிரபலம். இந்த ஸ்டைலுடன் இருக்கும் பிள்ளையார் சிலையும் இந்த விநாயகர் சதுர்த்தியில் வைரலாகி வருகிறது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்