விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிவி ப்ரீமியர் - ஹே சினாமிகா
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிவி ப்ரீமியர் - ஹே சினாமிகா

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘ஹே சினாமிகா’ திரைப்படம் கலர் தமிழ் டிவி சேனலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒளிபரப்பாகிறது..

கணவனின் அளவு கடந்த பாசத்தால் சோர்வடைந்து, அவரிடமிருந்து விலகிச் செல்வதற்கான வழிகளைத் தேடும் மனைவியை பற்றியதாகும். நடன இயக்குனர் பிருந்தா இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் நட்சத்திரா நாகேஷ், யோகி பாபு மற்றும் அபிஷேக் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மென்மையான காதல் - நகைச்சுவை நிறைந்த திரைப்படமான இந்த படத்தில் யாழனாக துல்கர் சல்மானும், மெளனாவாக அதிதி ராவ் ஹைதாரியும் நடித்துள்ளனர். ஏற்கனவே ஆகஸ்டு 28–ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒருமுறை ஒளிபரப்பான இப்படம் மீண்டும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்