Naane Varuven D Logo Top

சுந்தர சோழர் - செம்பியன் மாதேவி - மதுராந்தகன்
சுந்தர சோழர் - செம்பியன் மாதேவி - மதுராந்தகன்

சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ்

 

ஆதித்த கரிகாலன், குந்தவை & அருள் மொழி வர்மனின் தந்தையாகவும் சோழ அரசராகவும் இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.

 

செம்பியன் மாதேவி - ஜெய சித்ரா

மதுராந்தகனின் வளர்ப்பு தாயாராக, கண்டராதித்தனின் மனைவியாக வருபவர். சேந்தன் அமுதனின் உண்மையான தாயாக பின்னர் அறியப்படுபவர்.

அரண்மனையில் மந்தாகினி பெற்றெடுத்த குழந்தையை செம்பியன் மாதேவி வளர்க்கிறார். சோழ குலத்தில் பிறக்காத வாரிசு சோழ மன்னராக வருவது, சோழ வம்சத்துக்கு செய்யும் துரோகம் என, செம்பியன் மாதேவி வளர்க்கும் குழந்தை (மதுராந்தகன்) சோழ மன்னராகக் கூடாதென செம்பியன் மாதேவியிடம் கண்டராதித்தர் கூறுகிறார். இதனால் மதுராந்தகனை அரசனாக விடாமல் செம்பியன் மாதேவி தடுக்கிறார்.


மதுராந்தகன் - ரஹ்மான்

 

மதுராந்தகன் கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் புதினத்தில் நந்தினி கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக எதிர்மறை தன்மை கொண்டது குறிப்பிடத்தக்கது. நந்தினியின் சூழ்ச்சியால் அருண் மொழி வர்மன் & ஆதித்த கரிகாலனுக்கு எதிராக செயல்படும் கதாபாத்திரமாக அமைந்துள்ளது. ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனின் மகனாக மதுராந்தகன் கதாபாத்திரம் அமைந்துள்ளது.