தளபதி 63- ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விஜய், வைரலாகும் வீடியோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Thalapathy 63: Vijay stands on his Car and says BIG Hi to Fans

‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றியைத் தொடர்ந்து 3வது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. முதற்கட்டமாக சென்னை பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் விஜயை காண அவரது ரசிகர்கள் அதிகமானோர் குவிந்தனர். அப்போது காரில் ஏறி ரசிகர்களை பார்த்து விஜய் கை அசைக்கும் வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தளபதி 63- ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விஜய், வைரலாகும் வீடியோ VIDEO