கலகல காம்போ- மக்கள் செல்வனுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளார்.

Comedian Soori joins Vijay Sethupathi's film with director Vijay Chandar

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் புது இணைப்பாக காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளார். ஏற்கனவே‘சுந்தர பாண்டியன்’, ‘ரம்மி’ திரைப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சூரி இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்மா ரெட்டி, இடம் பொருள் ஏவல், சிந்துபாத், கடைசி விவசாயி உள்ளிட்ட தமிழ் படங்களும், கன்னட படம், மலையாள படம் என விஜய் சேதுபதி கைவசம் நிறைய திரைப்படங்கள் உள்ளன.