திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்-சில திருத்தங்களுடன் சேரனின் ‘திருமணம்’டிரைலர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் சேரன் இயக்கத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் ‘திருமணம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Director Cheran's Thirumanam trailer released

'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'தேசிய கீதம்',  'வெற்றிக் கொடி கட்டு', 'பாண்டவர் பூமி',  'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி', 'பொக்கிஷம்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் இயக்குநர் சேரன்.

தங்கர் பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி பல திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நீண்ட காலமாக திரைப்படங்கள் இயக்குவதை தவிர்த்து வந்த சேரன் தற்போது ‘திருமணம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் உமாபதிக்கு ஜோடியாக காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் இப்படத்தில் நடிக்கிறார்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலரில், இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே திருமணம் குறித்த புரிதல் எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றாலும், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதில் இருக்கும் சிக்கல்களை கூறும் வகையில் சில திருத்தங்களுடன் சேரனின் ‘திருமணம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை போலவே டிரைலரும் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்-சில திருத்தங்களுடன் சேரனின் ‘திருமணம்’டிரைலர் VIDEO