தீபாவளிக்கு தெறிக்கவிடுறது உறுதி- தளபதி 63 ரிலீஸ் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

Producer clarifies on Thalapathy 63 release plans

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பூஜையின் போதே தளபதி 63 தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தளபதி 63 திரைப்படத்தின் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டதற்கு முன்பாகவே திரைப்படம் வெளியாகும் என்ற தகவல் பரவின.

ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என தளபதி 63 தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகவே திட்டமிட்டப்படி, தீபாவளிக்கு தளபதி 63 ரிலீசாவது உறுதியாகியுள்ளது.