தளபதி 63-யில் இணையும் பிரபல அரசியல் பிரமுகர்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலை படக்குழு தரப்பு மறுத்துள்ளது.

Politician Nanjil Sampath is not part of Thalapathy 63

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு தரப்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ‘எல்.கே.ஜி’ திரைப்படத்தில் நாஞ்சில் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.