கதிர் போலீஸாக நடிக்கும் 'சத்ரு' டிரெய்லரை வெளியிட்ட அட்லி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கதிர் நடித்த 'சிகை' திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Kathir's Sathru Movie trailer released by Director atlee

அதனைத் தொடர்ந்து அவர் போலீஸாக நடித்துவரும் படம் 'சத்ரு'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்து வருகிறார்.  இந்த படத்தை நவீன் நஞ்சுண்டான் என்பவர் இயக்குகிறார்.  ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ரகு குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் கதிருடன் பொன்வண்ணன், மாரிமுத்து, சுஜா, ஆகியோர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார். நடிகர் கதிர் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் தளபதி 63 என்ற படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்ககது. 

கதிர் போலீஸாக நடிக்கும் 'சத்ரு' டிரெய்லரை வெளியிட்ட அட்லி VIDEO