இந்த படத்தில் கதிரின் கேரக்டர் இது தான் - சீக்ரெட் சொன்ன இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கதிர் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் ஏற்கனவே நடித்துள்ள சத்ரு என்ற படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

Director Naveen shares Kathir's character in Sathru

இந்த படத்தில் அவருக்கு ஜோடிாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். 'ராட்டினம்' படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வருணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துவருகின்றனர்.

இந்த படத்துக்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.

இந்த படம் வருகிற மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் நவீன், 'இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படம்.

ஆக்‌ஷன், ரொமான்ஸ் கலந்த படம். இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான வெற்றி படங்களான 'மரகத நாணயம்'  'ராட்சசன்' என பார்த்து, பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு 'சத்ரு' படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.

குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு படத்தின் கதை. 24 மணி நேரத்தில் நடக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம். படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது' என்றார்.