தளபதி ரத்தம் நான்-பிரபல நடிகரின் மகன் ஒரு வெறித்தனமான விஜய் ரசிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன், தான் ஒரு தீவிரமான விஜய் ரசிகர் என தெரிவித்துள்ளார்.

Nasser Son Abi Hassan's Ultimate Fan Moment with Thalapathy Vijay

நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே அட்லி இயக்கத்தில் வெளியான தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் டீசரில் அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள அபி ஹாசனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அபி ஹாசன், கடாரம் கொண்டான் திரைப்படம் பற்றியும், வெறித்தனமான ரசிகனாக தளபதி விஜய்யை பார்த்து ரசித்தது பற்றியும் பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அபி, கில்லி படத்தில் இருந்து தளபதியின் தீவிர ரசிகன் நான். மெர்சல் திரைப்படத்தின் லுக் டெஸ்ட்டின் போது முதன்முறையாக அவரை பார்த்தேன். நாசரின் மகன் என தெரிந்ததும் என்னை அழைத்து கைக்குலுக்கி, எனது அண்ணன் பற்றி பாசமாக விசாரித்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கை கழுவாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். மெர்சலில் உதவி இயக்குநராக இருந்தபோது, உனக்கு எதுக்கு இதெல்லாம் போய் நடிக்கிற வேலைய பாரு என்றார். அதன் பின் சமீபத்தில் அண்ணனின் பிறந்தநாள் பார்ட்டியில் சந்தித்தபோது, நடிக்க வந்தாச்சு வாழ்த்துக்கள் என்றார். தளபதி 63 படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

மேலும், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுகமாவது குறித்து பேசிய அபி ஹாசன், இயக்குநர் கதை கூறிய பின் கமல் சாரை சந்தித்தேன். அவர் உன்ன இன்னும் செலெக்ட் பண்ணல, இன்னும் சில டெஸ்ட்லாம் இருக்கு. அதை பண்ணின அப்புறம் தான் முடிவு செய்வோம் என்றார். வேலையில் எப்படி கமிட்டடா இருக்கணும் என டிப்ஸ் கொடுத்தார்.

கடாரம் கொண்டான் டீசர் வெளியானதும், என் அம்மாவிடம் நல்லா பண்ணிருக்காரு உங்க பையன் என கமெண்ட் சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று கூறினார். இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

தளபதி ரத்தம் நான்-பிரபல நடிகரின் மகன் ஒரு வெறித்தனமான விஜய் ரசிகர் VIDEO