தல அஜித்தின் அடுத்த அதிரடி - 'விஸ்வாசம்' தெலுங்கு டிரெய்லர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித், நயன்தாரா நடிப்பில் கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'விஸ்வாசம்' . சிவா இயக்கத்தில் உருவான இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Ajith and Nayanthara's Viswasam telugu trailer released

இந்நிலையில் அப்பா - மகளுக்கிடையேயான பாசப்போராட்டத்தை பேசிய இந்த படம் தற்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெளியாகவிருக்கிறது. அதனை முன்னிட்டு இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.

டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களை மனம் நெகிழ செய்தது. இந்த படத்தில் விவேக், யோகி பாபு , ரோபோ ஷங்கர், கோவை சரளா, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தல அஜித்தின் அடுத்த அதிரடி - 'விஸ்வாசம்' தெலுங்கு டிரெய்லர் இதோ VIDEO