அதிரடி ஆக்‌ஷனுக்கு ஆயத்தமாகும் ‘பேட்ட’ நாயகிகள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகைகள் சிம்ரன் மற்றும் த்ரிஷா மீண்டும் இணைந்து ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

'Petta' heroines Simran and Trisha join hands for an action adventure flick

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் முதன்முறையாக சிம்ரன் மற்றும் த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். பிரசாந்த்-சிம்ரன் நடித்த ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஓரிரு காட்சிகளில் நடித்தவர் நடிகை த்ரிஷா.

அதைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு‘பேட்ட’ திரைப்படத்தில்  மீண்டும் சிம்ரனும், த்ரிஷாவும் இணைந்து நடித்திருந்தனர்.

ஆனால், பேட்ட படத்தில் இருவருக்கும் நேரடியான காட்சிகள் ஏதும் இல்லை. இந்நிலையில் ஜீவா நடித்துள்ள ‘கொரில்லா’ திரைப்படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படம் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகவுள்ளது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் இப்படத்திற்காக சிம்ரனும், த்ரிஷாவும் கப்பற்படை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், இதன் ஷூட்டிங் பணிகள் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.