‘கண்ட நாள் முதல்’ பிடிக்குமா? 14 வருடங்கள் கழித்து மீண்டும் உருவாகும் காதல் கதை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் பிரசன்னா, லைலா, கார்த்திக் இணைந்து நடித்த ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Actor Prasanna's Romantic sequel is on the cards?

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்குநர் பிரியா இயக்கிய இப்படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியானது. முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு காமெடி கலந்த காதல் படமாக வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இயக்குநர் பிரியா, நடிகர் பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் ஆகியோர் மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் தங்களது ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தில் பணியாற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டதாகவும், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபகாலமாக வெற்றி பெற்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவது தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகின.

தற்போது பிரசன்னாவின் ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.