இந்த 'விஸ்வாசம்' நடிகைக்கு விரைவில் திருமணம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஜாங்கிரி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் மதுமிதா.  அந்த படத்தில் சந்தானத்துடன் அவர் செய்த காமெடி லூட்டிகளை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.

Ok OK Actress madhumitha will get married on February 15

அதனைத் தொடர்ந்து 'அட்டகத்தி', 'இதற்குதான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்களில் பிஸியாக நடித்துகொண்டிருந்தார்.

சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான 'விஸ்வாசம்' படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். இவருக்கும் இவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் வருகிற 15  ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து Behindwoods சார்பில் மதுமிதாவை தொடர்பு கொண்ட போது அவர் திருமணம் குறித்த தகவலை உறுதிப்படுத்தினார். திருமண வேலைகளில் பிஸியாக இருந்த அவர்,   மோசஸ் ஜோயல் தமிழ் திரையுலகில் உதவி இயக்குநராக பணிபுரிந்துவருவதாக கூறினார்.