சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் : தமிழக முதல்வர், துணை முதல்வர், கமல்ஹாசன் நேரில் வாழ்த்து

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கும் தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் இன்று (பிப்ரவரி 11) திருமணம் நடைபெற்றது.

Tamilnadu CM Palanisamy Attends Sundarya Rajinikanth marriage

இந்த திருமண விழாவில் பல்வேறு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு தம்பதியினரை வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து, மு.க. அழகிரி, வைகோ, தமிழருவி மணியன், சுப்பிரமணி ரெட்டி , உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அவர்கள் மட்டுமல்லாது கமல்ஹாசன், மோகன் பாபு, விஷ்ணு மஞ்சு, லக்ஷ்மி மஞ்சு, ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஏவிஎம் சரவணன், பி. வாசு, கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், கஸ்தூரி ராஜா, கலைப்புலி எஸ்.தாணு, வைரமுத்து, மதன் கார்க்கி , அதிதி ராவ், எஸ்பி முத்துராமன், தயாநிதி அழகிரி, ஹரி, பிரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.