நான் அடுத்த ரஹ்மானா ? அனிருத் ஓபன் டாக்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்த படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற ஒரே பாடல் மூலம் புகழ் பெற்றார்.

Anirudh answers about RajiniKanth's speech in Petta Audio launch

பின்னர் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயன், விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கும் அவர் தான் இசையமைப்பாளர்.

இந்நிலையில் Behindwoods  தளத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் பேட்டியளித்தார். அப்போது  "அனிருத் அடுத்த ரஹ்மான்" என தனுஷ் தன்னிடம் குறிப்பிட்டதை  ரஜினிகாந்த் பேட்ட இசை வெளியீட்டுவிழாவில் பகிர்ந்தார். அதுகுறித்து அனிருத்திடம் கேட்ட போது,

'ரஹ்மான் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அது மாதிரி வரணும்னா இன்னொருத்தர் பொறந்து தான் வரனும். நம்ம வீட்டுல யாராவது சின்ன பையன் கீ போர்டு வாசிச்சா சொல்லுவோம்ல நீ ரஹ்மான் மாதிரி வருவனு. நான் அவர் சொன்னத அந்த மாதிரி தான் எடுத்துக்கிறேன்' என்றார்.

பின்னர் நேயர்களுக்காக எனக்கென யாருமில்லையே என்ற பாடலை கீபோர்டு இசைத்தபடி பாடிக்காட்டினார்.

நான் அடுத்த ரஹ்மானா ? அனிருத் ஓபன் டாக் VIDEO