கிறிஸ்டோபர் நோலனிடம் 'மன்னிப்பு' கேட்ட கமல்.. காரணம் என்ன?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kamal apologises to Christopher Nolan tamil cinema news

'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கும் நடிகர் கமல், பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சமீபத்தில் மும்பையில் சந்தித்திருக்கிறார்.

 

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல், "கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். ’டன்கிர்க்’ படத்தை, திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்.

 

எனது தவறுக்கான பிராயச்சித்தமாக, ’ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கியிருக்கிறேன். அவர் நான் நடித்த 'பாபநாசம்' படத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி' எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் நடைபெற்ற 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்' திரைப்படம் 3 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 

 

Met Mr.Christopher Nolan. Apologized for seeing Dunkirk in the digital format and in return am sending Hey Ram in digital format for him to see. Was surprised to know he had seen Paapanaasam. 😊

'கமல்-விக்ரம்' படத்தை நிராகரித்த 'பிரபல' நடிகர்.. காரணம் என்ன?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Nithin reveals why he rejected Vikram's next film produced by Kamal Haasan tamil cinema news

கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ராஜேஷ் எம்.செல்வா படத்தை இயக்கவிருக்கிறார்.

 

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நிதின் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் நிதினும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "விக்ரம்-கமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் என்னிடம் தேதிகள் இல்லை என்பதால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை,'' என கூறியிருக்கிறார்.

RELATED LINKS

Kamal apologises to Christopher Nolan tamil cinema news

People looking for online information on , Christopher Nolan, Kamal Haasan will find this news story useful.