BGM2018 Short Film News Banner

'கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்'... கமல்ஹாசன் காட்டம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kamal Haasan's statement on Cauvery water dispute tamil cinema news

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க முடியாது என, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும் என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் காட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல் கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்,'' என தெரிவித்துள்ளார்.

 

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சித் தொகுப்பாளர் இவர்தான்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kamal Haasan to host Bigg Boss season 2 tamil cinema news

தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் 1' நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். 

 

முதல் சீசனை கமல் தொகுத்து வழங்கியதால் 2-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார்? என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

 

இந்த நிலையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆமாம். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது உலகநாயகன் கமல்ஹாசன் தான்.

 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan's statement on Cauvery water dispute tamil cinema news

People looking for online information on Kamal Haasan will find this news story useful.