'அவர் அப்படித்தான்' ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்த கமல்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kamal Haasan's criticized about Rajini's silence tamil cinema news

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் சென்னை புறப்படுவதற்கு முன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், "குரங்கணி நிகழ்வை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகி விட்டது,'' என்றார்.

 

அப்போது நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களில் பதில் சொல்லாமல் நழுவுகிறாரே என, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கமல், ''இதுமட்டும் இல்லாமல் அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்,'' என்று பதிலளித்தார்.

குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம்: கமல்ஹாசன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kamal Haasan mourns the death of people who died in Kurangani forest fire tamil cinema news

தேனி மலைப்பகுதியில் உள்ள குரங்கணி பகுதிக்கு மலையேற்றம் சென்றவர்களில், சுமார் 9 பேர் இதுவரை உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தேனி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்துகமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும்.

 

மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்,'' என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan's criticized about Rajini's silence tamil cinema news

People looking for online information on Kamal Haasan, Rajinikanth will find this news story useful.