இந்தியாவின் ஜாக்கி சான் தளபதி விஜய் - சொன்னது யார் தெரியுமா ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

மற்றமொழிப் படங்கள்  தமிழில் வெளியாகும் போது சப் - டைட்டிலுடன் வெளியாவது வழக்கம். மேலும் தமிழ் படங்கள் மற்ற மொழிகளில் வெளியாகும் போது சப் டைட்டிலுடன் வெளியாகும். ஒரு படம் உலக அளவில் பிரபலமாவதற்கு சரியான  சப்- டைட்டில் மிக அவசியம்.

Chinese said to Vijay, You are indian Jackie Chan

இந்த சப் டைட்டில் பணிகளை மேற்கொள்வதில் புகழ்பெற்றவராக விளங்குபவர் ரெகஸ். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் திருமணத்தில் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். பிரபு, நா.முத்துக்குமார், இயக்குநர் பாலா, சிவக்குமார் உள்ளிட்டோருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அப்போது விஜய்யுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், 7 வருடங்களுக்கு முன் எனது மகள் திருமணத்தில் சந்தித்தோம். எங்கள் இருவருக்குமான அன்பு ஷாங்காயில் உருவானதா அல்லது முன் ஜென்மத்திலா என தெரியவில்லை.

விஜய் நன்றாக பேசினார். அப்போது சீனாவைச் சேர்ந்த ஒருவர் விஜய்யிடம் நீங்கள் இந்தியாவின் ஜாக்கி சான் என்றார். அந்த வார்த்தையை மறக்க முடியாது.என்றார்.