'96' குட்டி ஜானுவின் அடுத்த படம் என்ன தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்த ‘96’ திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

96 fame Gouri Kishan, younger version of Jaanu's next film starts rolling

பிரேம்குமார் இயக்கத்தில் பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து வெளியான ‘96’ திரைப்படத்தில் இளம் வயது ராம்-ஜானுவாக நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இதில் இளம் வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷனுக்கென தனியாக ரசிகர்கள் உருவாகினர். இந்நிலையில், கௌரி அடுத்து எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடத்தில் இருந்த நிலையில், ‘96’ திரைப்படத்தை தொடர்ந்து கௌரி அடுத்ததாக மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார்.‘அனுகிரஹித்தன் அந்தோனி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. இதனை நடிகை கௌரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

96 குட்டி ஜானு நடிக்கும் அடுத்த திரைப்படமும் வெற்றியடைய ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படம் 2019ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.