முதலையுடன் மல்லுக்கு நிற்கும் கன்னித்தீவு கதாநாயகிகள்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகை வரலக்ஷ்மி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய 4 ஹீரோயின்களும் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கன்னித்தீவு’ திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் பாலு இயக்கி வருகிறார்.

Kanni Theevu heroines to have a stunt sequence with Crocodile

இவர் ஏற்கனவே த்ரிஷா முன்னணி கதாநாயகியாக நடித்த ‘கர்ஜணை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்புராயன், சர்மிளா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், அடுத்த கட்ட ஷூட்டிங் கேரளாவில் நடைபெறவுள்ளது. மிக பிரம்மாண்டமான ஏரியில் 9 அடி நீளமான முதலையுடன் வரலக்ஷ்மி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய 4 பேருடன் மொட்டை ராஜேந்திரனும் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.

இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத அளவில் உருவாகி வரும் இந்த முதலை சண்டை படத்தின் பிற்பாதியில் வரும் என இயக்குநர் சுந்தர் பாலு தெரிவித்துள்ளார். இந்த சண்டைக் காட்சியை ஸ்டண்ட் சிவா எடுத்து வருகிறார்.

அரோல் கரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு  சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.