பிரபல நடிகரின் கட்சியில் இணைந்த அப்துல்கலாமின் ஆலோசகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரராக தெலுங்கு திரையுலகில் கால்பதித்தவர் பவன் கல்யாண். தற்போது இவர் தனக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

Addul Kalam's advisor Pon Raj to serve Pawan Kalyan's Janasena party

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியைத் தொடங்கினார். மேலும் வருகிற 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக செயல்பட்ட  பொன்ராஜ் தற்போது பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார்.

இவர் அக்கட்சியின் ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.