பாஸ் பாக்கும்போது இப்படி வேலை செஞ்சா அப்ரைசல் கன்ஃபார்ம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 26, 2018 05:06 PM
When the boss sees you while you work

பொதுவாக ஆள் இல்லாதபோது ஒரு மாதிரியாகவும், வேலை செய்வதை கண்காணிப்பதற்கு ஆள் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் சிலர் பணிபுரிவதுண்டு.  வேலை என்பது விரும்பி செய்ய வேண்டியது என்பது நிதர்சனமான  ஒன்று. நம்மை வேலை வாங்குபவர்கள் முடுக்கினால்தான் நாம் வேலை செய்வோம் என்கிற நிலை இருப்பின், இன்னும் சிரமம்.


சுரம் இல்லாமல் தேமே என்று வேலை செய்யும் மனப்பான்மை எப்போதுமே பணியில் திருப்தியை உண்டாக்குவதில்லை. நாம் நமக்காக செய்துகொள்ளும் நம் வேலைகளும் கூட அப்படித்தான். சில நேரம் போர் அடிக்கிறது என்று விருப்பத்தோடு வீட்டைத் துடைத்துச் செய்யத் தொடங்கினால்,  அந்த வேலை முடிந்த பின் முழு திருப்தியை நாம் அனுபவித்திருப்போம்.


அதுபோலத்தான் இங்கு ஒரு பெண்மணி, வீட்டின் பால்கனியை சுத்தம் செய்கிறார். ஆனாலும் பால்கனியின் கண்ணாடி மீதேறி படுத்துக்கொண்டு கிட்டத்தட்ட விட்டால் விழுந்துவிடும் நிலைக்கு இறங்கி வேலை செய்யும் இவரை யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அதையும் அறியாமல் அந்த பெண்மணி செய்யும் சின்சியரான வேலையை, இந்நேரம் ஆபீஸ் மீட்டிங்கில் ஊழியர்களை மோட்டிவேட் செய்வதற்கான இன்ஸ்பிரேஷனாக கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டுக் காண்பிக்கத் தொடங்கியிருப்பார்கள்.

 

Tags : #JOB #WORK #BOSS #SINCERITY